Wednesday 24 August 2016

தமிழ்

            
Image result for தமிழ்
                தமிழ்

தமிழ் எங்கள்    மூச்சாக   வேண்டும்!

தமிழ் எங்கள்    பேச்சாக வேண்டும்!

தமிழ் கொண்டு உறவாட வேண்டும்!

தமிழ் கொண்டு உரையாட வேண்டும்!

தமிழ் வாழ நாம் வாழ்த்த வேண்டும்!

தமிழ் மானம்  நாம் காக்க வேண்டும்!

தமிழ் என்றும்   உயிர் வாழ வேண்டும்!

தமிழ் என்றும் உயர்வாக வேண்டும்!

தமிழ் எங்கள் தவமாக வேண்டும்!

தமிழ் எங்கள் வரமாக வேண்டும்!              

தமிழ் பெயர்கள் நாம் சூட்ட 
வேண்டும்!          

தமிழ் பாடி தாலாட்ட 
வேண்டும்!                

தமிழ் நூல்கள் நாம் கற்க 
வேண்டும்!              

தமிழ் கலைகள் நாம் பேண வேண்டும்!    

தமிழ் கவிதை நாம் படைக்க வேண்டும்!



Saturday 2 July 2016

பொறுமை!!



மனிதனுக்கு   தேவை மொழி                                        
மொழிக்கு    தேவை பேச்சு

பேச்சுக்கு     தேவை படிப்பு

படிப்புக்கு     தேவை கல்வி

கல்விக்கு     தேவை ஆசிரியர்

ஆசிரியருக்கு தேவை வேலை

வேலைக்கு   தேவை பொறுமை!!!


கவிதையின் சிறப்பு

           கவிதையின் சிறப்பு

ஒரு நிமிடம் யோசிக்க வைத்த கவிதை

பல நிமிடங்களில் வாக்கியமானது,  
                                                                               வாக்கியமான இக்கவிதை பிரபலமானது,

பிரபலமான இக்கவிதை இன்று உலகம்


       சுற்றும்  வாலிபனாக திகழ்கிறது!!!                      

Monday 29 February 2016

அளவைகள் பிறந்த கதை


                          


       ஜீலியஸ் சீசரின் ரோமானிய படைகள், சீரான வேகத்தில் நடப்பதற்காக சிறிது இடைவெளி விட்டு நிற்பார்கள். அதுபோல 1000 தடவை இடைவெளியை குறிக்கும் தொலைவை ‘மில்லியாபாசம்’ என்று லத்தின் மொழியில் கூறினார்கள். அந்த அளவே இன்று ‘மைல்’ என்று குறிப்பிடப்பிடப்படுகிறது.அதேபோல ஒருவனின் மூக்கு நுனியில் இருந்து அவரது நீட்டிய கையின் நுனி வரை உள்ள நீளமே ’கெஜம்’ என அழைக்கப்பட்டது.

சூரிய உதயத்தில் இருந்து, மறையும் நேரம் வரை ஒருவன் இரண்டு காளைகளையும் கொண்டு உழுகின்ற நிலப்பரப்பின் அளவே ஓர் ஏர் எனப்பட்டது.


Thursday 25 February 2016

இந்திய நதிக்கரை நகரங்கள்


திருச்சி                -  காவிரி
ஆக்ரா                 -  யமுனை
கட்டாக்                -  மகாநதி
ஜாம்ஷெட்பூர்          -  சுபர்ணரேகா
ஹரித்துவார்,பாட்னா
வாரணாசி,ரிஷிகேஷ்    -  கங்கை

ஜபல்பூர்               -  நர்மதா
கொல்கத்தா            -  ஹீக்ளி
லக்னோ               -  கோமதி
லூதியானா            -  சட்லஜ்
நாசிக்                 -  கோதாவரி
ஸ்ரீநகர்                 -  ஜீலம்
சூரத்                  -  தப்தி
விஜயவாடா           -  கிருஷ்ணா
திருநெல்வேலி         -  தாமிரபரணி  


Monday 11 January 2016

முடியாது என்பது முடியாது..!!!


  • யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது..!!
  • பன்றிகள் வானத்தை அண்ணாந்து பார்க்க முடியாது..!!
  • பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது..!!
  • முதலைக்களுக்கு நாக்கை வெளியே நீட்ட முடியாது..!!
  • பறந்தாலும், நின்றாலும்,அமர்ந்தாலும் தட்டான் பூச்சிகளால் இறக்கையை மடக்க முடியாது..!!
  • முதலை.திமிங்கலம் போன்றவற்றுக்கு மீன்களைப் போல நீருக்குள் மூச்சுவிட முடியாது..!!
  • கிவி பறவையால் 2 அடி கூட பறக்க முடியாது..!!