Friday, 20 January 2017

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு


Image result for விருதுகள்

விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு

அசோக சக்ரா விருது      -  1952
சாகித்ய விருது            -  1954
ஞான பீட விருது          -  1961
தாதாசாகிப் விருது         -  1969
வியாஸ் சம்மான் விருது   -  1991
சரஸ்வதி சம்மான் விருது  -  1991

   விளையாட்டு விருதுகள்
அர்ஜூனா விருது        -  1961
துரோனாசார்யா விருது   -  1985
தயான் சந்த் விருது       -  2002

பெண்ணின் நட்பு


Related image

நீ பெண்ணாக இரு
  ஆனால் பெண் அடிமையாக இருக்காதே
நல்ல முறையில் வாழ்
  கெட்டதை செய்ய நினைக்காதே
உறவுடன் இணைந்து இரு
  ஆனால் உறவை பிரிக்காதே
நண்பர்களுடன் பழகு
  ஆனால் நண்பர்களை விட்டு செல்லாதே..!!

எடிசன் குறிப்பு

                           
 Image result for எடிசன்
     ஒரு நாள் பள்ளியிலிருந்து  வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே  கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தம் ஆக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்.
     “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகி விட்டார்.
     எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒரு நாள் தனது வீட்டின் பழைய சமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பு  ஒரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சை ஆக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது
     ”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்.” என்று இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
      மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன்  தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனான். என்று தன் பிள்ளைகள்  மீதான “உயர்வான எண்ணங்கள்”. அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.