தமிழ்
தமிழ்
எங்கள் மூச்சாக
வேண்டும்!
தமிழ்
எங்கள் பேச்சாக
வேண்டும்!
தமிழ்
கொண்டு உறவாட
வேண்டும்!
தமிழ்
கொண்டு உரையாட
வேண்டும்!
தமிழ்
வாழ நாம்
வாழ்த்த வேண்டும்!
தமிழ்
மானம் நாம் காக்க வேண்டும்!
தமிழ்
என்றும் உயிர்
வாழ வேண்டும்!
தமிழ்
என்றும் உயர்வாக வேண்டும்!
தமிழ்
எங்கள் தவமாக வேண்டும்!
தமிழ்
எங்கள் வரமாக வேண்டும்!
தமிழ்
பெயர்கள் நாம் சூட்ட
வேண்டும்!
தமிழ்
பாடி தாலாட்ட
வேண்டும்!
தமிழ்
நூல்கள் நாம் கற்க
வேண்டும்!
தமிழ்
கலைகள் நாம் பேண வேண்டும்!
தமிழ்
கவிதை நாம் படைக்க வேண்டும்!